கடவுச்சீட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றில்
முன்னிலையாகியுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்ற சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் டயானா கமகேவை சந்தேக நபராக பெயரிடுமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

