Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைடயானா கமகே தலைமறைவு

டயானா கமகே தலைமறைவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேஇ தனது வீட்டிலிருந்து தலைமறைவாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

இராஜதந்திர கடவூச்சீட்டு பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்பில்இ முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சந்தேகநபராக பெயரிட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அண்மையில் இரட்டை கடவுச்சீட்டு மற்றும் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பாக டயானா கமகே சர்ச்சைகளுக்கு உள்ளானார். அது தொடர்பில் தானும் இலங்கை பிரஜை என நாடாளுமன்றத்தில் தெரிவித்த போதும், அதை தொடர்ந்து பல குழப்ப நிலைகள் காணப்பட்டன.

இந்நிலையிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, தலைமறிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

இதன்படிஇ சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையிலேயே, டயனா கமகே தங்கியிருந்த வீட்டிலிருந்து அவர் தலைமறைவாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம்இ நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

டயனா கமகேஇ இலங்கை பிரஜை அல்லவென உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கிய நிலையில், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.

இந்த நிலையில்இ கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர்இ தனது இலங்கை கடவூச்சீட்டை டயனா கமகே, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் ஒப்படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments