Friday, April 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைலாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் விடுத்த அவசர அறிக்கை

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் விடுத்த அவசர அறிக்கை

சந்தையில் லாஃப்ஸ் வர்த்தக நாமத்தைக் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தற்காலிகத் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவும் ஊடகச் செய்திகள் தொடர்பில் அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி,  ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 30, 000 மெட்ரிக் தொன் எல்.பி. எரிவாயு இறக்குமதி -ஏற்றுமதி களஞ்சிய முனையத்தை உள்ளூர் விநியோகத்திற்காகப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள ஒழுங்குமுறை சார்ந்த கட்டுப்பாடுகளே தற்போதைய சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கான பிரதான காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் களஞ்சிய முனையத்தை உள்ளூர் நடவடிக்கைகளுக்காக விரைவாக
விடுவிப்பதற்குத் தேவையான சட்டரீதியான செயற்பாடுகள் தொடர்பில்,
உரிய அரச அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து செயற்பட்டு
வருவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை,  உள்ளூர் சமையல் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்வதற்காக,
சர்வதேச விநியோகத்தர்களிடமிருந்து நேரடியாக எரிவாயுத் தொகைகளைக்
கொழும்பு துறைமுகத்தினூடாக நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்குத் தேவையான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எரிவாயுத் தொகைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தவுடனேயே,
நிறுவனத்திற்குச் சொந்தமான சிலிண்டர் நிரப்பும் முனையத்தில் அவற்றைச்
சிலிண்டர்களில் நிரப்பி,  நாடு முழுவதும் தடையின்றி விநியோகிப்பதற்கான
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் தடையற்ற எரிவாயு விநியோகத்தைப் பேணுவதற்குத் தேவையான
அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ்
எரிவாயு நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments