Friday, April 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைடைனமோட் வெடி பொருளுடன் இரு மீனவர்கள் கைது

டைனமோட் வெடி பொருளுடன் இரு மீனவர்கள் கைது

மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு
என தமது உடமையில் டைனமோட் வெடி பொருளை வைத்திருந்த சந்தேகத்தின்
அடிப்படையில் இரு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது மீன் பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில்
டைனமொட் வெடி பொருளை வைத்திருந்த இரு மீனவர்களை
ஓலைத்தொடுவாய் கடற்படையினர் கைது செய்தனர்

அவர்களிடம் மூன்று தொகுதி டைனமோட் வெடி பொருள் மீட்கப்பட்ட நிலையில்
மேலதிக விசாரணைகளின் பின்னர் இரு சந்தேக நபர்களையும் மன்னார்
கடற்றொழில் நீரியல் திணைக்களத்தினரிடம் மேலதிக விசாரணைக்காக
ஒப்படைத்திருந்தனர்

இதனை தொடர்ந்து மேலதிக விசாரணையின் பின்னர் இன்று குறித்த இரு
சந்தேக நபர்களையும் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில்
ஆஜர்படுத்திய நிலையில் எதிர் வரும் ஐந்தாம் திகதி வரை இரு மீனவர்களையும்
விளக்கமரியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

அதே நேரம் கைப்பற்றப்பட்ட டைனமொட் வெடி பொருளை இரசாயன
பகுப்பாய்வுக்கு என இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு
அனுப்பு வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments