எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை என
யாழ்.பல்கலைச் சமூகத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று(19.02.2026) இடம்பெற்று வரும் நிலையில், 22ஆம் திகதி
வரை நான்கு நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்போது, எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத்
தேவையில்லை, இதனை அரசு உடனடியாக இரத்துச்செய்ய வேண்டும் என
சமூகத்தினரால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது..
தொடர்ந்து நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ள குறித்த போராட்டத்தில்
புலம்பெயர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

