இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகில் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, குறித்த பொதிகளில்
இருந்தது ஹெரோயின் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை
குறிப்பிட்டுள்ளது.
அதன்படி 103.28 கிலோ கிராம் எடையுள்ள 92 ஹெரோயின் பொதிகள்
கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு
தெரிவித்துள்ளது.

