Saturday, August 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஈரான் மாலுமிகளின் சடலங்களுடன் புறப்பட்டது விமானம்

ஈரான் மாலுமிகளின் சடலங்களுடன் புறப்பட்டது விமானம்

ஈரானின் கடற்படை கப்பல் மூழ்கடித்ததில் கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிக்கொண்டு விசேட விமானம் ஒன்று ஈரான் நோக்கிப் புறப்பட்டுள்ளது.

ஈரானிய ஏர்பஸ் 340 ரக என்ற விசேட விமானம் நேற்று இரவு 9.29 மணிக்கு
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம்
இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

கொச்சினில் தங்கவைக்கப்பட்டிருந்த மற்றொரு ஈரான் கடற்படை கப்பலான
IRIS Lavan  இன் இருந்த 183 ஈரான் மாலுமிகளையும் ஏற்றிக்கொண்டு
குறித்த விமானம் செல்லவுள்ளது.

இதேவேளை குளிரூட்டியில் வைக்கப்பட்ட 84 பேரது உடல்களையும்
ஒரேதடவையாக கொண்டு செல்ல முடியாததால்,  45 உடல்கள் முதல்கட்டமாக
கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி சர்வதேசக் கடலில் நின்ற ஈரான் கப்பல் மீது
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரானின் 84 மாலுமிகள்
உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments