ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் அப் பாதையினூடாகப் பயணிக்கும்
எவரும் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரானின்
இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, குறித்த பாதையை கடக்க முயன்ற மூன்று கப்பல்களைத்
திருப்பி அனுப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கூறிய பொய்களைத் தொடர்ந்து, ‘அந்த கப்பல்கள் நீரிணையைக் கடக்க முயன்றதாக
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை குற்றம் சாட்டியுள்ளது.

