ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்ஜீவவின் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான
இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் காவலின் கீழ் பிறந்தநாள் கொண்டாட்டத்தை
ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின்
அதிகாரி ஒருவருக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பொலிஸ் பேச்சாளர் எஃப். யு. வூட்லர் இதனை தெரிவித்துள்ளார்
இந்தச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நேற்றைய தினம் (29) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவொன்றின் ஊடாக
இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் அதிகாரிகள் அரசாங்கத்தின் ஊழியர்கள், அவர்கள் எந்தக் காலத்திலும்
குற்றவாளிகளுடன் தொடர்புகளைப் பேண முடியாது.
பொலிஸார் தமது விழுமியங்களையும் பொறுப்புக்களையும் உணர்ந்து
கடமையாற்ற வேண்டும்.
இந்தச் சம்பவம் பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்குக் களங்கம்
விளைவிக்கும் செயலாகும்.
தவறிழைக்கும் அதிகாரிகள் எவராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல்
பொலிஸ் தலைமையகம் தண்டனை வழங்கப்படும் என பொலிஸ் பேச்சாளர்
எஃப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார்

