கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் இன்று (09) காலை தொழில் புரிந்து கொண்டிருந்த நிலையில் இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு சம்பவத்தில்
உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட
பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

