Wednesday, July 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்

அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்

ஆற்றல் நெருக்கடி மற்றும் அரச செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான புதிய சுற்றறிக்கையை நிதியமைச்சின் செயலாளர் அனைத்து
அமைச்சுகளின் செயலாளர்கள்,  மாகாண பிரதம செயலாளர்கள்,
திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு
அனுப்பியுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய போர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு,
கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்
அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவுகள் மார்ச் முதலாம் திகதி
நிலவிய விலையின் அடிப்படையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும்,  புதிய சுற்றறிக்கையின் மூலம் குறித்த கட்டுப்பாடு இரத்து செய்யப்பட்டுள்ளதுடன்,  ஜூலை முதலாம் திகதி முதல் தற்போதைய
எரிபொருள் விலையின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments