மத்தியஇ கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில்
கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்
அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (22) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (23
அதிகாலை 1.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை
மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில்
இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக
வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது சில பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த
காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்காகப்
பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

