யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான டீசல், மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோல் ஆகியவை கடல்வழியாகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
இதற்கமைய, நேற்று(25) புதன்கிழமை இரண்டு எரிபொருள் பவுசர்களில்
மொத்தமாக 39, 600 லீற்றர் எரிபொருள் நெடுந்தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச்
சங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், அரச நிதியூடாக
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 13, 200 லீற்றர் டீசல், 19,800 லீற்றர் மண்ணெண்ணெய் மற்றும் 6, 600 லீற்றர் பெற்றோல் ஆகியவை கொண்டுசெல்லப்பட்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட
எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் நிரப்பப்பட்டுள்ளன.
குறித்த எரிபொருட்கள் காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து
கடற்படையினரின் தரையிறங்கு கலத்தில் ஏற்றப்பட்டுஇ பாதுகாப்பான முறையில்
நெடுந்தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
நெடுந்தீவில் இதுவரை நிரந்தரமான எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத
நிலையில், அங்கு வாழும் மக்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக
குறிகட்டுவான் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.
இதனால் போக்குவரத்துச் செலவு, நேர விரயம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை
மக்கள் எதிர்கொண்டனர்.
இந்த நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

