Thursday, November 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசெம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள்
உறுதியாக இருக்கின்றோம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்
சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் செம்மணி மனித
புதைகுழியில் மீட்கப்படும் சிறுவர்களின் என்புத்தொகுதிகள் அதிகளவில்
மீட்கப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அந்த விடயத்தில் ஏற்கனவே எங்களுடைய நீதித்துறை அமைச்சர் ஈடுபட்டுக்
கொண்டிருக்கின்றார். அதற்கான நிறுவனங்களும் அதில் செயல்பட்டுக்
கொண்டு வருகின்றார்கள்.

உண்மையிலேயே இதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள்
உறுதியாக இருக்கின்றோம். தற்போது சோதனைகள், பரிசோதனைகள்
நடந்து கொண்டிருக்கின்றது. அதன் முடிவுகளில் நாங்கள் பார்ப்போம்,
உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் என்னவென்பதை நாங்கள் இதில் பார்ப்போம் –
என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments