Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமட்டக்களப்பு காந்தி பூங்கா அருகே கையெழுத்து வேட்டை

மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகே கையெழுத்து வேட்டை

அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்தக் கோரி
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை
ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தொழில் வல்லுநர்களின் தேசிய முன்னணி உடன் தேசிய வளங்களை பாதுகாக்கும் கூட்டணி இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

சுமார் 10 இலட்சம் பொதுமக்களின் கையெழுத்துக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

10 இலட்சம் கையெழுத்துக்களை சேகரித்த பின்னர் அதனை அடிப்படையாகக் கொண்டு,  உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

அந்தவகையில் குறித்த மகஜரில் தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments