வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா,
பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களில்
100 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ
மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்
75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும்
வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (30-40) வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது, தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்க தேவையான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

