Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாகேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீடிப்பு

கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீடிப்பு

டெல்லி முதலமைச்சர் அர்விந் கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை
மே 20-ம் திகதி வரை நீடித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ஆம் திகதி
கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அர்விந் கேஜ்ரிவால் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல்
டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது நீதிமன்றக் காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில்
காணொலி வாயிலாக விசாரணை நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன்பு
அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை
மே 20-ம் திகதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments