Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதொடரும் கிராம உத்தியோகத்தர்களின் போராட்டம்

தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் போராட்டம்

சம்பள அதிகரிப்பு , சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூதூர் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் 2 வது நாளாக இன்றும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுடைய நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.

இந்நிலையில் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகத்திற்கு சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments