எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள்
தீர்மானித்துள்ளன.
பொருளாதார நீதியை நிறைவேற்றாதது தொடர்பாக, 72 தொழிற்சங்கங்களின்
சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 4 மாதங்களுக்கு முன்னர்
தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட தொழிநுட்ப அறிக்கையின் படிஇ
கொடுப்பனவுகளை வழங்குவதாக எழுத்து மூலம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அது ஏப்ரல் மாதம் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும்இ இதுவரையில் அந்த வாக்குறுதி உரிய முறையில் நிறைவேற்றப்படாததால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்ததாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
இதன்படிஇ நோயாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டுஇ நாடு தழுவிய
பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு பதிலாகஇ மாகாண ரீதியாக
அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களை கடமையில் இருந்து
வெளியேறும் தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் 09ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
09 – வட மத்திய மாகாணம், 13 – மத்திய மாகாணம், 14 – சப்ரகமுவ மாகாணம்,
15 – வடமேற்கு மாகாணம், 16 – தென் மாகாணம் 20 – ஊவா மாகாணம்
21 – மேல் மாகாணம் போன்றவற்றில் பணிப்புறக்கணிப்பு போராட்டம்
முன்னெடுக்கப்படவுள்ளது.

