Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது

போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது

இஸ்ரேல் தெற்கே செங்கடலையொட்டிய வடக்கு கரையோரத்தில் அமைந்த
இலாத் நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் இஸ்ரேல் பொலீசார் தெரிவிக்கையில் 10 மாதங்களாக இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதன்படி ஆபத்துக்குரிய போதைப்பொருட்களை கடத்தி விநியோகம் செய்பவர்கள் என சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளுடன் ஒருவராக எங்களுடைய அதிகாரிகள் செயற்பட்டனர்.

அத்துடன் நகரத்தில் உள்ள பல இடங்களில் இதுபோன்ற பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இதில்,  கொக்கைன்,  கெட்டமைன் மற்றும் தோசா உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத போதைப்பொருட்கள் வெவ்வேறு அளவுகளில் விநியோகிக்கப்பட்டிருந்தன

இதற்கான சான்றுகள் சேகரிக்கப்பட்டு இந்த நடவடிக்கைகளால் அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments