Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைக.பொ.த சாஃத பரீட்சையில் முறைகேடு

க.பொ.த சாஃத பரீட்சையில் முறைகேடு

நாட்டில் தற்போது நடைபெற்று வரும் சாதாரணப் பரீட்சையில் இடம்பெற்ற
முறைகேடுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும்இ ஹசலக்க பிரதேசத்தில் உள்ள
ஒரு பரீட்சை நிலையத்திலும் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்குத் தோற்றியவர்கள் நேற்று வழங்கப்பட்ட ஆங்கில வினாத்தாளை
கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்து மற்ற
தரப்பினருக்கு அனுப்பி விடை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த நேரத்தில் பரீட்சை நிலையங்களில் இருந்த அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைக் கைப்பற்றியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments