Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு

உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழந்துள்ளதாக
ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர்
ஹொசைன் அமிரப்துல்லா ஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர், பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் பயணித்த உலங்குவானூர்தி நேற்று விபத்திற்குள்ளானது.

ஈரான் மற்றும் அஸர்பைஜான் எல்லைப்பகுதயில் அணை ஒன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் குறித்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.

விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் விபத்து நடந்த இடத்தில் உலங்குவானூர்தியில் இருந்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு கட்ட தேடுதலின் பின்னர் ஈரான் ஜனாதிபதி உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments