Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபொகவந்தலாவை பிரதான வீதியில் கார் விபத்து

பொகவந்தலாவை பிரதான வீதியில் கார் விபத்து

ஹட்டன், பொகவந்தலாவை பிரதான வீதியில் வனராஜா பகுதியில் நேற்று மாலை
கார் ஒன்று சறுக்கி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நோர்வூட் நோக்கி பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த சிறு குழந்தை உட்பட இருவர் காயமடைந்து
டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார்
தெரிவித்தனர்.

குறித்த விபத்து கனமழையினால் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த நோர்வூட் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments