மாத்தறை கொட்வில புதிய மாவட்ட வைத்தியசாலையில் 24 வயதுடைய தாய் ஒருவர்
உயிரிழந்த நிலையில் சிசுவொன்றைப் பிரசவித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர் .
உயிரிழந்த சிசுவின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்த தாய் தனிப்பட்ட வைத்தியரின் அறிவித்தலின் பேரில் கடந்த 22 ஆம் திகதி இறந்த தனது சிசுவைப் பிரசவிப்பதற்காக கொட்வில புதிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இந்நிலையில்இ இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னர்
தாயைப் பரிசோதித்த தனியார் வைத்தியசாலையின் வைத்தியர் வயிற்றிலிருந்த
சிசுவின் இதயம் செயலிழந்து உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சிசுவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .

