Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதோப்பூரில் இரண்டு மாலைநேர உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை

தோப்பூரில் இரண்டு மாலைநேர உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை

திருகோணமலை,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்திலுள்ள மாலை நேரக் கடைகள்  மாலை திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது உணவு பாதுகாப்பு பல ஒன்றுகூடல்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு, கள பரிசோதனைகள் மூலம் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு, அதனை திருத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் குறைபாடுள் நிவர்த்தி செய்யாத 02 மாலை நேர சிற்றூண்டி நிலையங்களுக்கு, உணவு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உணவு கையாண்டமைக்காக எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மூதூர்  சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகள் ஐ.எம்.றினூஸ் தெரிவித்தார்.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முஹைதீன் அவர்களின் ஆலோசனைக்கமைய மூதூர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இவ் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments