Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமஸ்கெலியாவில் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு

மஸ்கெலியாவில் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு

நுவரெலியா,  மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட ஒருவர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments