Monday, May 11, 2026
https://thaaitv.com/
Homeஆன்மிகம்நாக பூசணி அம்மன் ஆலய மகோற்சவம் ஆரம்பம்

நாக பூசணி அம்மன் ஆலய மகோற்சவம் ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை சாந்தி கிரியைகள் நடைபெற்றன.

இன்றைய தினம் அதிகாலை பூஜை வழிபாடுகளை தொடர்ந்து மதியம் கொடியேற்றம் நடைபெற்றது.

தொடர்ந்து 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும்
20ஆம் திகதி வியாழக்கிழமை காலை தேர் திருவிழாவும் மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழா இடம்பெற்று மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவ திருவிழாக்களும் நிறைவு பெறவுள்ளன.

மேலும் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி இம்முறையும் யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இடையில் விசேட பேருந்து சேவைகளும் குறிகாட்டுவான் நயினாதீவு இடையில் விசேட படகு சேவைகளும்இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments