தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம்இ மண்டபம் அருகே
மரைக்காயர்பட்டினம் மீனவ கிராமத்தில் 60 சாக்கு மூட்டைகளில் கட்டி மறைத்து
வைக்கப்பட்ட 2 தொன் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சியை
சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக இஞ்சி மூட்டைகள் பதுக்கி
வைக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக
சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

