Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்குவைத் தீ விபத்து: வெளியான தகவல்

குவைத் தீ விபத்து: வெளியான தகவல்

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரிலுள்ள
அடுக்குமாடி குடியிருப்பொன்றில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களில் 42 பேர் இந்தியர்கள் எனவும் மீதமுள்ளவர்கள் பாகிஸ்தான்,  பிலிப்பைன்ஸ்,  எகிப்து மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் இயங்கி வரும் பிரபலமான தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் ஊழியர்கவே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும்,  உயிரிழந்தவர்களின் உடலை விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்காகவும் இந்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் நேற்று குவைத்திற்கு பயணமாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments