Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅதிக விலையில் பாணை விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

அதிக விலையில் பாணை விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில்இ
குறைக்கப்பட்ட புதிய விலையில் பாணை விற்பனை செய்யாது அதிக விலைக்கு விற்பனை
செய்யும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சோதனைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவார புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளைஇ ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சட்டப்படியான எடை மற்றும் அளவிடும் கருவிகள் மீதான சோதனையின் போது 210 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட உதவி அளவீட்டு அலகு தர நிர்ணய சேவை அத்தியட்சகர் தில்ருக் பட்டியாபொல தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments