Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாபொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலும் உறுதி

பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலும் உறுதி

காலத்தின் தேவையுணர்ந்து தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலும் தான் உறுதியாக உள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

பிரித்தானியா வாழ் கிளிநொச்சி மக்களை லண்டனில் சந்தித்துப் பேசியபோதே சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்,  ஈழத்தமிழரை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இனத்தின் இருப்புக்காகவும் இறைமைக்காகவும் அரசியல் பணியாற்றவே நான் இணைந்துகொண்டேன்.

எனது அரசியல் பயணத்தையும் அதுசார்ந்த பணிகளையும் அதே தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் நின்றுதான் எமது மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

எனவே,  இறுதிவரை அந்தக் கொள்கையில் பிறழ்வற்று பயணிக்கத் தலைப்பட்டுள்ளேன் எனவும் தெரிவித்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments