Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதன்படி,  அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன,  இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ராதேவி வன்னியாராச்சி மற்றும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் அரசியல் சபைக் கூட்டத்தில் அக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்திற்கு எதிராக வேறொரு வேட்பாளரை ஆதரித்தமைக்காக அவர்களது கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments