2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்குகள் அடிப்படையில் தற்போதைக்கு அநுரகுமார திசாநாயக்க சுமார் 60 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மொத்த தபால் வாக்குகள்
இதுவரை வெளியான காலி, திருகோணமலை, மொனராகலை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அளிக்கப்பட்டிருந்த தபால் மூல வாக்குகளில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க பெற்றுக் கொண்டுள்ளார்.
அவர் பெற்றுக் கொண்டுள்ள 90,857 வாக்குகள் எண்ணப்பட்டுள்ள மொத்த தபால் வாக்குகளில் 60. 21வீதம் ஆகும்.
அதனையடுத்து சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். அவர் பெற்றுக் கொண்டுள்ள 27,800 வாக்குகள் இதுவரை எண்ணப்பட்டுள்ள தபால் மூல வாக்குகளில் 18.42 வீதம் ஆகும்.
இதுவரை எண்ணப்பட்டுள்ள தபால் மூல வாக்குகளில் 26,162 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, 17.34 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ இது வரை அளிக்கப்பட்டுள்ள வாக்குகளில் 1.7 வீதம் மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளார். தற்போதைக்கு வரை அவர் மொத்தமாக 2969 வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்டுள்ளார்.

