Tuesday, September 29, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாஅதிகரிக்கும் இஸ்ரேல் - லெபனான் மோதல்: பிரித்தானியா விடுத்துள்ள அறிவிப்பு

அதிகரிக்கும் இஸ்ரேல் – லெபனான் மோதல்: பிரித்தானியா விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலையதடுத்துஇ மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த பிரித்தானிய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இஸ்ரேலின் குறித்த தாக்குதலில் 1992ஆம் ஆண்டிலிருந்து ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவராக செயற்பட்டு வந்த நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

இதனால்,  மோதல் மேலும் தீவிரமைடைய வாய்ப்புள்ளதாகவும் இது பிராந்திய போருக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி போர்நிறுத்ததை வலியுறுத்தியுள்ளதோடு பிரித்தானிய அதிகாரிகளும் அதனை முன்மொழிந்துள்ளனர்.

இதன்போது , போர் இஸ்ரேல் மற்றும் லெபனான் மக்களுக்கு ஒருபோதும் நன்மையை தராது என டேவிட் லாமி தெரிவித்திருந்தார்

இதேவேளை, லெபனானில் உள்ள பிரித்தானிய மக்களை பிரித்தானிய அரசு விமான சேவைகளை அதிகரித்து,  அவசர அவசரமாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments