Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஉழவியந்திரம் மீது டிப்பர் மோதி விபத்து

உழவியந்திரம் மீது டிப்பர் மோதி விபத்து

கேப்பாபிலவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட உழவியந்திரம் மீது டிப்பர் வாகனம் மோதிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (26) காலை இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,  வற்றாப்பளை கேப்பாபிலவு பகுதியில் வீதிக்கு அருகாமை நிறுத்தி வைக்கப்பட்ட உழவியந்திரத்தில் டிப்பர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளளது.

உழவு இயந்திரத்தை வயல் பகுதிக்கு அருகாமை நிறுத்திவிட்டு உழவியந்திர சாரதி வயலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து வற்றாப்பளை நோக்கி வந்த டிப்பர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்ட உழவியந்திரத்துடன் மோதியுள்ளது.

குறித்த விபத்து சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments