Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-51மூ சதவீத வாக்களிப்பு

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-51மூ சதவீத வாக்களிப்பு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இன்று பிற்பகல் 2 மணி வரை 51 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டப்ளியூ ஏ தர்மசிறி தெரிவித்துள்ளார்.

வாக்குப் பதிவுகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாகவும் காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் 4 மணிக்குப் பின்னர் வாக்குச் சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகவுள்ளதுடன் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 55, 643 ஆகும். என்றும் அவர் குறிப்பிட்டார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments