கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு மேலதிகமாக இரு புகையிரத சேவையினை
ஆரம்பிக்கவுள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்
தெரிவித்தார்.
நீண்டகாலமாக யாழ் – கொழும்பிற்கு ஒரேயொரு புகையிரத சேவை மட்டும்
இடம்பெற்று வருவதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் பொதுமக்களினால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஆராய்ந்திருந்ததுடன் , போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர்
பிமல் ரத்நாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். எனது வேண்டுகோளிற்கு அமைவாக, 15ம் திகதியில் இருந்து ஒரு புகையிரத சேவையும்இ 31ம் திகதியில் இருந்து பிறிதொரு புகையிரத சேவையும் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

