Friday, September 25, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாடெல்லியின் 4-வது பெண் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேகா குப்தா

டெல்லியின் 4-வது பெண் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேகா குப்தா

டெல்லியின் 4-வது பெண் முதலமைச்சராக ரேகா குப்தா இன்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்.

டெல்லி மாநிலத்தில் சுஷ்மா சுவராஜ் (பா.ஜனதா).  ஷீலா தீட்ஷித் (காங்கிரஸ்), அதிஷி (ஆம் ஆத்மி) ஆகியோரைத் தொடர்ந்து 4-வது பெண் முதலமைச்சராக தற்போது ரேகா குப்தா பதவி ஏற்கவுள்ளார்.

அந்தவகையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட விழாவில் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜனதா மந்திரி சபை பதவி ஏற்கவுள்ளது.

இப் பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments