Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

15 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்
ஒருவரை சுன்னாகம் பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சுன்னாகம்
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராமநாயக்க மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய
குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கலும் ஆகிய இருவரின் வழிப்படுத்தலுக்கு
அமைவாக புகையிரத நிலையத்திற்கு விரைந்த பொலிசார் அருகாமையில் உள்ள
வீடொன்றினை முற்றுகையிட்ட பொழுது 15 கிராம் ஹெரோயின் மற்றும்
2 கிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றினர் .

தொடர்ந்து 29 வயதான இளைஞர் ஒருவரை சந்தேகநபராக கைது செய்து
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments