Sunday, July 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமன்னார் பிரதேசசபை தமிழ்த்தேசியப் பேரவை வசம்

மன்னார் பிரதேசசபை தமிழ்த்தேசியப் பேரவை வசம்

மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஏ.ஜே.எம்.ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர்
தேவந்தினி பாபு தலைமையில் இன்று (24) நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் பதவிக்காக தமிழரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவல்
மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான்
ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவலுக்கு ஆதரவாக 09 வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் அவர்களுக்கு ஆதரவாக 13 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இந்த நிலையில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

அதன்பின்னர் இடம்பெற்ற உப தவிசாளர் தெரிவில், மன்னார் பிரதேச சபையின்
உப தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன்
சாந்தினி குரூஸ் தெரிவு செய்யப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments