Sunday, July 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்; பிரதமருடன் விசேட சந்திப்பு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்; பிரதமருடன் விசேட சந்திப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க்
இலங்கையை நேற்று வந்தடைந்தார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்துள்ள
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வரவேற்றுள்ளார்.

அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்
வோல்கர் டர்க்,  பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது நாட்டிலுள்ள பல்வேறு மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள்
தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதன.

இந்த விஜயத்தில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்இ மனித உரிமைகள் சார்
பல்வேறு விடயங்கள் தொடர்பில் மேலும் பல அரசு உயர் மட்ட அதிகாரிகளை
சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இலகையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேலும் அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு
வேலைவாய்ப்பு மற்றம் சுற்றுலா அமைச்சர்,  பல அமைச்சரவை அமைச்சர்கள்பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரசு அதிகாரிகள்,  மதத்,  தலைவர்கள்,  சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திர சமூக உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments