Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇராணுவ தளபதியின் சேவைக் காலம் நீடிப்பு

இராணுவ தளபதியின் சேவைக் காலம் நீடிப்பு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மேலும் ஒரு வருட கால சேவை நீடிப்பு
வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொடரிகோ
கடந்த வருடம் டிசம்பர் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்
இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அனுபவமிக்க இராணுவ அதிகாரியானஇ லெப்டினன் ஜெனரல் ரொட்ரிகோ முன்னர்
இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக பணியாற்றியுள்ளதுடன்
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் தளபதியாகவும்
செயற்பட்டுள்ளார்.

கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியின் பழைய மாணவரான இவர்,
1989 ஜனவரி 20 ஆம் திகதி இராணுவத்தில் கேடட் அதிகாரியாக இணைந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments