Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியா'கிங்டம்' திரைப்படம்? பனர்களை கிழித்து முற்றுகையிடப்பட்ட திரையரங்கம்

‘கிங்டம்’ திரைப்படம்? பனர்களை கிழித்து முற்றுகையிடப்பட்ட திரையரங்கம்

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான ‘கிங்டம்’, ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்துக் காட்டுவதாகத் தெரிவித்து
தமிழக அரசியல்வாதிகள் பலரும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள்
அடிமைகள் போலவும் தீண்டத் தகாதவர்களாகவும் நடத்துவது போன்று
இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில், தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை எப்படி
வேண்டுமானாலும் திரித்து, தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும்
அனுமதிக்க முடியாது என அரசியல்வாதிகள் கண்டித்துள்ளனர்.

ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களை ஒடுக்கினார்களென அத்திரைப்படத்தில்
காட்டப்படுவது வரலாற்றுத்திரிபு எனவும் மிகப்பெரும் மோசடித்தனம் எனவும்
குறிப்பிடுகின்றனர்.

வரலாற்றில் ஒருநாளும் நடந்திராத ஒன்றை நடந்ததாகக் காட்டி,  ஈழ சொந்தங்களை
மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று
தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான்,
ஈழத் தமிழர்களை இழிபடுத்தும் காட்சிகள் கிங்டம் படத்தில் இருப்பதாக
கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இன்று நாம் தமிழர் கட்சியினர் திரைப்படம் வெளியான
திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு,  அப்பகுதியில்
இருக்கும் ஒரு திரையரங்கில் கிங்டம் பட பேனரை கிழித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களைத்
தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவ, பின்பு பொலிஸாருக்கும் அவர்களுக்கும் சிறு
வாக்குவாதமும் தள்ளு முள்ளும் நடைபெற்றது. இந்நிலையில் ‘கிங்டம்’ படத்தின்
சில காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து தியேட்டர்கள் முன் பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments