Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇஷாரா செவ்வந்திக்கு பண உதவிகளை வழங்கியது யார் ; வெளியான தகவல்

இஷாரா செவ்வந்திக்கு பண உதவிகளை வழங்கியது யார் ; வெளியான தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தின் சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு பண உதவிகளை வழங்கியது போதைப்பொருள் கடத்தல்காரரான மத்துகம ஷான் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (24) தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவிய இரண்டு பெண்கள் உட்பட நால்வரையும் பிரதான துப்பாக்கிதாரியையும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  இன்று (24) கொழும்பு நீதவான் நீதிமன்றில்  உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஷாரா செவ்வந்தி வழங்கி வரும் வாக்குமூலங்களின் அடிப்படையில் தீவிர விசாரணைகள் முன்னெடுத்து சந்தேக நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments