Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் 08 திடீர் பணக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

யாழில் 08 திடீர் பணக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றிலும் மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தினை யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுத்தல், வட்டிக்கு பணத்தினை வழங்கி அதனை திரும்ப செலுத்த தவறுபவர்களை கடத்தி சென்று சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி அவற்றை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுதல், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தல், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளின் ஊடாக சொத்துக்களை சேர்த்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் விசேட பிரிவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments