Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாபிரித்தானியாவில் இடம்பெற்ற சிறப்பு தைப்பொங்கல் விழா

பிரித்தானியாவில் இடம்பெற்ற சிறப்பு தைப்பொங்கல் விழா

பிரித்தானியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்புகளை கௌரவிக்கும்
வகையில்,  டவுனிங் ஸ்ட்ரீட் எண் 10-ல் சிறப்பு தைப்பொங்கல் வரவேற்பு நிகழ்வு
நடைபெற்றுள்ளது.

குறித்த விழாவானது கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் ஸ்டீவ் ரீட் மற்றும் பிரித்தானியாவின் முதல் தமிழ் வம்சாவளி
நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன் ஆகியோர் இணைந்து இந்த
நிகழ்வை நடத்தியுள்ளனர்.

தொழிற்கட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதற்குப் பின்னர்இ தொடர்ந்து இரண்டாவது
ஆண்டாக டவுனிங் ஸ்ட்ரீட்டில் தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில்,  பிரித்தானிய தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசியல் பிரதிநிதிகள் மட்டுமின்றி,  கலை மற்றும் பொழுதுபோக்கு,  கல்வி,
பொது சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னோடிகளும்
கலந்து கொண்டனர்.

இது,  பிரித்தானியாவில் தமிழ்ச் சமூகத்தால் வழங்கப்பட்ட நீண்ட கால மற்றும்
பல்வேறு துறை சார்ந்த பங்களிப்புகளை பிரதிபலிப்பதாக அமைந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments