Monday, May 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்தவருக்கு வழங்கப்பட்ட உத்தரவு

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்தவருக்கு வழங்கப்பட்ட உத்தரவு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து
கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ் . போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நேற்று முன்தினம் நள்ளிரவு
வேளை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் கண்காணிப்பையும் மீறி ,  அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர் ,  சுத்திகரிப்பு பணியாளர்களின் மேற்பார்வையாளரின் கையடக்க தொலைபேசியை களவாடியுள்ளார்.

அது தொடர்பில் அறிந்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் விரைந்து செயற்பட்டு ,
கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞனை மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இளைஞனை விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments