Thursday, April 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமட்டக்களப்பில் ஊடுருவிய இரண்டு காட்டுயானைகள்: ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ஊடுருவிய இரண்டு காட்டுயானைகள்: ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்புஇ வாழைச்சேனை நகரிலும், கிராமத்திற்குள்ளும் இரண்டு காட்டுயானைகள் இன்று (13) அதிகாலை 6 மணியளவில் ஊடுருவியது.

இதன்போது வாழைச்சேனை நகரில் ஊடுருவிய போது இடியப்பம் விற்றுக்கொண்டு வந்த 68 வயது மூதாட்டி காட்டுயானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கிராமத்திற்குள் நுழைந்த 2 காட்டுயானைகள் மேற்கொண்டதாக்குதலில் மொத்தமாக 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த காட்டுயானைகளை காட்டிற்கு விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments