கொழும்பில் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று காலை முதல் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
அத்துடன், குறித்த பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள்
கேன்களில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக
நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

