Saturday, August 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தல்

ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தல்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டு
வருவதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி,  கடந்த மார்ச் 23, 24 மற்றும் 26 ஆகிய திகதிகளில் பத்தரமுல்ல
‘சுஹுருபாய’ தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களுக்கு
ஒருநாள் சேவையின் கீழ் வருகை தந்து,  தேசிய அடையாள அட்டைகளைப்
பெற்றுக்கொள்ள முடியாமல் போன விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம்,
நாளை (30) ஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டைகளை வழங்க
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட அந்த விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன்
உரிய அலுவலகங்களுக்கு வருகை தந்து தமது அடையாள அட்டைகளைப்
பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் 31-ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் பத்தரமுல்ல
தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழமை போன்று
ஒருநாள் சேவை இடம்பெறும்

அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைத்
தகவல் உறுதிப்படுத்தல் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட
ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே,  சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதற்காக மாற்று வழிகளைப்
பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் சாதாரண சேவை
முன்வரிசை அலுவலகச் செயற்பாடுகள் எதிர்வரும் 2026 ஏப்ரல் 06-ஆம் திகதி
திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும்.

கணினி கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பின்னர் அனைத்துச்
சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என அந்த ஊடக அறிக்கையில்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments